செம்மொழித் தமிழ் நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகள் - அறிமுகம் & பதிப்புக் குறிப்புகள்

அச்சுப் பதிப்புகளின் வெளியீட்டு விவரம்

தொல்காப்பியம்

எழுத்ததிகாரம்

நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பு

1. தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும், சகலகலாசாலைத் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய மழைவை மகாலிங்கையரால் பரிசோதிக்கப்பட்டுக் கல்விக்கடல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, பிலவங்க – ஆவணி [1847]

இளம்பூரணர் உரைப் பதிப்பு

தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் உரையாசிரியரென்னும் சிறப்புப் பெயரையுடைய இளம்பூரணருரையும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணக்கருள் ஒருவராகிய திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரால் பரிசோதிக்கப்பட்டுச் சென்னை, அத்திநீயம் அண்ட் டேலிநியூஸ் பிரான்ச் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, விபவ – கார்த்திகை [1868]

சொல்லதிகாரம்

சேனாவரையர் உரைப் பதிப்பு
தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் சேனாவரையருரையும், மேலைமணம்பேடு ஸ்ரீநிவாஸசடகோப முதலியாரவர்கள் வேண்டுகோளின்படி கோமளபுரம் இராசகோபால பிள்ளையவர்களால் வர்த்தமானதரங்கிணீசாகை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, விபவ – கார்த்திகை [1868]

இளம்பூரணர் உரைப் பதிப்பு
தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் இளம்பூரணர் உரையும், காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரால் பரிசோதிக்கப்பட்டுச் சென்னை, காக்ஸ்டன் பிரஸில் பதிப்பிக்கப்பட்டது, 1927

நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பு
தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டு, சென்னபட்டணம், விக்டோரியா ஜூபிலி அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, நந்தன - புரட்டாசி [1892]

தெய்வச்சிலையார் உரைப் பதிப்பு
தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் தெய்வச்சிலையார் உரையும், அரங்க. வேங்கடாசலம் பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டது, கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு, சுக்கில – வைகாசி [1929]

கல்லாடர் உரைப் பதிப்பு
தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும், சைவப் புலவர் சித்தாந்த நன்மணி கு. சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கவுரையுடன் பதிப்பிக்கப்பட்டது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1964


பொருளதிகாரம்

இளம்பூரணர் உரைப் பதிப்பு
தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல் மூலமும் இளம்பூரணார் உரையும், கா. நமச்சிவாய முதலியாரால் பரிசோதிக்கப்பட்டுச் சென்னை காக்ஸ்டன் பிரஸில் பதிப்பிக்கப்பட்டது, 1920

தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல் மூலமும் இளம்பூரணர் உரையும், வ.உ. சிதம்பரம் பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டு, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ் அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டுள்ளது, 1933

தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் மூலமும் இளம்பூரணர் உரையும், வ.உ.சிதம்பரம் பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டு, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ் அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டுள்ளது, 1935

நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பு
தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டு, சென்னை, ஸ்காட்டிஸ் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, பார்த்திப – ஆவணி [1885]

தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், ஸேதுஸமஸ்தான வித்வான், ரா. இராகவையங்காரால் பரிசோதிக்கப்பட்டு, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலையில் பதிப்பிக்கப்பட்டது, 1917


பேராசிரியர் உரைப் பதிப்பு
தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், ராவ்பஹதூர் ச. பவானந்தம் பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டு, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, 1917

தொல்காப்பிய மூலம்
தொல்காப்பியம் - நன்னூல் மூலம், வால்ற்றார் ஜாயீஸ் துரையவர்களுதவியைக் கொண்டு இ. சாமுவேல் பிள்ளையினால் சென்னை மாநகரம் கிறிஸ்து மதக்கியான விளக்கச் சங்கத்தார் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, 1858

சங்க இலக்கியம்


எட்டுத்தொகை

2. எட்டுத்தொகையிலொன்றாகிய நற்றிணை மூலமும் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும், மேற்படி உரையாசிரியரால் சென்னபட்டணம் சைவவித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது, ராக்ஷச – வைகாசி [1915]

3. எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை மூலமும் திருக்கண்ணபுரத் தலத்தான் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கன் இயற்றிய உரையும், மேற்படி உரையாசிரியரால் வித்யாரத்னாகர அச்சுக்கூடத்திற் பதிப்பித்து வெளியிடப்பட்டது, 1915

4. எட்டுத்தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும், கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பல பிரதிரூபங்களைக் கோண்டு பரிசோதித்து சென்னபட்டணம் வைஜயந்தி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது, சோபகிருது – ஆனி [1903]

5. எட்டுத்தொகையுள் நான்காவதாகிய பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பரிசோதித்துச் சென்னபட்டணம் வைஜயந்தி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, குரோதி – ஆனி [1904]

6. எட்டுத்தொகையுள் ஐந்தாவதாகிய பரிபாடல் மூலமும் ஆசிரியர் பரிமேலழகரியற்றிய உரையும், சென்னை, பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பரிசோதித்து, சென்னை, கமர்ஷியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, 1918

7. நல்லந்துவனார் கலித்தொகை மூலமும் மதுரை பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும், யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களால் பரிசோதிக்கப்பட்டு, சென்னை ஸ்காட்டிஸ் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது,1887

8. எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், ஸேதுஸமஸ்தான வித்வான் உ. வே. ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்து சென்னை, கம்பர் விலாஸம் வே. இராஜகோபாலையங்காரால் பதிப்பிக்கட்டது, ருதிரோத்காரி [1918]

9. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய புறநானூறு மூலமும் உரையும், கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பரிசோதித்துச் சென்னை, வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, 1894

பத்துப்பாட்டு

10. பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும், கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பரிசோதித்து, சென்னை, திராவிடரத்நாகர அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது, 1889

பதினெண்கீழ்க்கணக்கு

20. தெய்வப்புலமை திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த திருக்குறள் மூலபாடம், தொண்டமண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் மாசத்தினச்சரிதையின் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது, 1812

21. முனிவர்களருளிச்செய்த நாலடியார் மூலபாடம், தொண்டமண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் மாசத்தினச்சரிதையின் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது,1812

22. பூதஞ்சேந்தனார் அருளிச் செய்த இனியது நாற்பது மூலமும் உரையும், சேதுஸம்ஸ்தான வித்வானும் செந்தமிழ்ப் பத்திராசிரியருமான ரா. இராகவையங்காரால் வெளியிடப்பட்டது, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, 1903

23. சங்கமருவிய சான்றோரிலொருவராகிய பெருவாயின் முள்ளியாரால் அருளிச் செய்யப்பட்ட ஆசாரக்கோவை மூலமும் உரையும், பாளையங்கோட்டை, சிந்தாமணியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, 1883

24. நல்லாதனாரால் செய்யப்பட்ட சங்கமருவிய நீதி நூலாகிய திரிகடுகம், திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியார் செய்த உரையுடன் நல்லூர் சதாசிவப்பிள்ளையால் சென்னபட்டணம் வர்த்தமானதரங்கிணீசாகை யச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, விபவ - புரட்டாதி [1868]

25. விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை மூலமும் உரையும் பி. வாசுதேவ முதலியாரால் பதிப்பித்து வெளியிடப்பட்டது, 1872

26. முன்றுறையரையனார் இயற்றிய பழமொழி நானூறு மூலமும் உரையும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியர் தி. செல்வக்கேசவராய முதலியாரால் பரிசோதிக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டது, சென்னை, எஸ்.பி.சி.கே. பிரஸ், 1917

27. காரியாசான் செய்த சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும், சண்முகசுந்தர முதலியாரவர்களால் பரிசோதித்து திரிசிரபுரம் புத்தக வியாபாரம் தி. சபாபதிப்பிள்ளையவர்களது மட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது, யுவ - மேடரவி [1875]

28. பொய்கையாரருளிச்செய்த களவழி நாற்பது மூலமும் உரையும், கொன்றமாநகரம் சண்முகசுந்தரமுதலியாரவர்களால் பரிசோதித்து மட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, யுவ – மேடரவி [1875]

29. மதுரைக் கண்ணங்கூத்தனார் செய்த கார்நாற்பது மூலமும் உரையும், சண்முகசுந்தர முதலியாரவர்களால் பரிசோதித்து திரிசிரபுரம் புத்தக வியாபாரம் தி. சபாபதிப்பிள்ளையவர்களது மட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது, மிதுனரவி [1870]

30. கபிலராற்செய்த இன்னா நாற்பது மூலமும் உரையும், கொன்றைமாநகரம் சண்முகசுந்தர முதலியார் அவர்களாற் பரிசோதித்து, தி. சபாபதிப்பிள்ளையவர்களது மட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது, தாது – ஆவணி [1876]

31. மதுரை சங்கப்புலவருளொருவராகிய கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி, உறையூர் மதுரைநாயக முதலியாரல் பார்வையிடப்பட்டுத் திருச்சினாப்பள்ளி வி. பக்கியம் பிள்ளை அண்டு சன்ஸ் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, 1895

32. கணிமேதையார் செய்த ஏலாதி மூலமும் உரையும், ஊ. புஷ்பரத செட்டியாரால் தமது கலாரத்நாகர அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது, சென்னை, 1887

33. மாறன்பொறையனார் அருளிச்செய்த ஐந்திணையைம்பது மூலமும் உரையும், சேதுசம்ஸ்தான வித்துவானும் செந்தமிழ்ப் பத்திராசிரியருமாகிய ரா. இராகவையங்காரால் பரிசோதிக்கப்பட்டது, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலை பதிப்பு, 1903

34. கணிமேதாவியார் அருளிச்செய்த திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும், சேதுசம்ஸ்தான வித்வானும் செந்தமிழ்ப் பத்திராசிரியருமான ரா. இராகவையங்காரால் பதிப்பிக்கப்பெற்றது, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, 1904

35. மூவாதியார் செய்த ஐந்திணை யெழுபது மூலமும் உரையும், இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை சோமசுந்தர தேசிகரால் பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது, வஸந்தா அச்சுக்கூடம், மாயூரம், 1926

36. சாத்தந்தையார் மகனார் கண்ணன் சேந்தனார் அருளிச் செய்த திணைமொழி ஐம்பது மூலமும் பழைய உரையும், இலக்கண விளக்க பரம்பரை சோமசுந்தர தேசிகரால் பரிசோதிக்கப்பட்டு திருவாரூர்த் தமிழ்ச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது, திருவாரூர் விக்டோரியா அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, 1918

37. பதினெண் கீழ்க்கணக்கினுள் கைந்நிலை மூலமும் பழைய உரையும், இடையாற்று மங்கலம் வைத்தீச்சுவரையரவர்கள் குமாரர் அனந்தராமையரால் பரிசோதித்துச் சென்னை, நோபில் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது, 1931

காப்பியங்கள்


சிலப்பதிகாரப் பதிப்பு

38. சிலப்பதிகாரம் புகார்காண்டம், வேனிற்காதை வரையுள்ள மூலம், தி. ஈ. ஸ்ரீநிவாசராகவாசாரியாரால் பு. ம. சபாபதி முதலியாரது கல்விவிளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, 1872

சிலப்பதிகாரம் முதலாவது புகார்காண்டம் மூலம், சென்னை பிரெஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய ஈ. ஸ்ரீநிவாசராகவாசாரியாரவர்களால், ஊ. புஷ்பரத செட்டியாரவர்களது கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது, 1876

சேரர் குலத்துதித்த இளங்கோவடிகள் இயற்றிய பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் புகார் காண்டம் மூலமும் அடியார்க்குநல்லார் உரையும், தமிழ்ப் புலவர் தி. க. சுப்பராய செட்டியாரால் மிமோரியல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, விக்கிரம – சித்திரை [1880]

இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் அரும்பதவுரையும், கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால் பரிசோதித்துச் சென்னை வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, 1892

மணிமேகலைப் பதிப்பு

39. மணிமேகலை (மூலம் மட்டும்) மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் பாடியது, புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் அவர்கள் மாணாக்கர் திருமயிலை சண்முகம்பிள்ளையால் பார்வையிடப்பட்டுச் சென்னை மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, விஜய – தனுர்ரவி [1894]

கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் அருளிச் செய்த மணிமேகலை மூலமும் கும்பகோணம் கவர்ன்மென்ட் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையரெழுதிய அரும்பதவுரையும், உ.வே. சாமிநாதையரால் சென்னை, வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்படது, 1898

இறையனாரகப்பொருள்

40. இறையனாரகப்பொருள், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கண்டருளிய உரையோடு யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பரிசோதிக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டது, ஸ்காட்டிஸ் அச்சுக்கூடம், சென்னை, சுபானு - சித்திரை [1883]

முத்தொள்ளாயிரம்

41. முத்தொள்ளாயிரச் செய்யுட்கள், ஸேதுஸம்தான வித்துவானும் செந்தமிழ்ப் பத்திராசிரியருமான ரா. இராகவையங்காரால் பரிசோதிக்கப்பெற்றன, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு,1905

முதல் அச்சுப் பதிப்பு - மின் நூல்கள் திட்ட உருவாக்கக் குழு

 

 

பின் செல்க